Tuesday, May 30, 2017

பெரியநாயக்கன்பாளையத்தில் பட்டாளம்மன்கோவில் பண்டிகை தொடக்கம்


பெரியநாயக்கன்பாளையத்தில் கஸ்துாரிபாளையம் ரோட்டில் உள்ள ஶ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் பூச்சாட்டு பெருதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை தொடங்கின.

இக்கோவிலின் 15 நாள் பூச்சாட்டுத்திருவிழா செவ்வாய்கிழமை பூச்சாட்டுடன் தொடங்கின.இதற்கு கோவில் அர்ச்சகர்கள் ஆறுமுகம்,துரைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.ஓடும்பிள்ளை துரைசாமி,விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முதலில் இங்குள்ள முத்துவிநாயகர், கருப்பராயர், லெகுமியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.தொடர்ந்து பண்டிகையை நடத்த அம்மனிடம் பூக்கேட்கும் வைபவம் நடந்தது.தொடர்ந்து நிறைவழிபாடு நடந்தது.எதிர்வரும் ஒருவாரகாலத்திற்கு தினமும் காலை மாலை இருவேளையும் அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட உள்ளது.முக்கிய நிகழ்ச்சியான பால்கம்பம் மற்றும் பூக்கம்பங்கள் நடும் நிகழ்ச்சி வரும் மே.30ஆம் தேதி செவ்வாய்கிழமை நடக்கிறது.பூக்கம்பமானது பெரியநாயக்கன்பாளையம் சந்தைப் பேட்டை மஹா மாரியம்மன் கோவிலிருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட உள்ளது.
தொடர்ந்து தினசரி தாள வாத்தியங்களுடன் கம்பம் சுற்றி ஆடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன்.5 ஆம் தேதி திங்கள்கிழமை நள்ளிரவில் 12 மணியளவில் முனிப்பனுக்கு ஆட்டுக்கிடாய்கள் வெட்டி கிராமத்தில் உள்ள முனிகளை விரட்டும் வகையில் ரத்தச்சோறு வீசும் நிகழ்ச்சியும், ஜூன்.6, செவ்வாய்கிழமை இரவு கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் அம்மன் அழைப்பு, நகைகள், ஜலம், மதுரைவீரன், வெள்ளையம்மா, பொம்மியம்மா, பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் எடுத்துவரும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஜூன்.7, புதன்கிழமை நடக்கும் பண்டிகையில் காலை 6 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் சந்தைப் பேட்டை மஹா மாரியம்மன் கோவிலிருந்துசக்திக் கரகங்கள் எடுத்துவரும் ஊர்வலமும்,காலை 10 மணியளவில் பொங்கல் வைத்தலும் நடக்கின்றன. மதியம் 12 மணியளவில் நடக்கும் அன்னதானத்தை கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடக்கி வைக்கிறார். மாலை 4மணியளவில் மாவிளக்கு,முளைப்பாரி எடுத்துவரும் ஊர்வலம் நடக்கிறது.  ஜூன்.8,வியாழக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற உள்ள மஞ்சள்நீராட்டு விழாவில் ஶ்ரீ பட்டதரசியம்மன் வெள்ளைக் குதிரையில் கிராமத்தின் முக்கியவீதிகளில் ஊர்வலமாக வந்து அருள்பாலிக்கிறார். ஜூன்.9,வெள்ளிக்கிழமை பௌர்ணமி தினத்தன்று மறுபூஜையுடன் விழா நிறைவுறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment