Sunday, June 11, 2017

 பெரியநாயக்கன்பாளையத்தில்
பட்டாளம்மன்கோவில் திருவிழா
 (07-06-2017)

பெரியநாயக்கன்பாளையத்தில் கஸ்தூரி பாளையம் ரோட்டில் விவேகானந்தபுரத்தில் உள்ள ஶ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் பூச்சாட்டு பெருதிருவிழா வெள்ளிக்கிழமை மறுபூஜையுடன் நிறைவடைந்தன.

இக்கோவிலின் 15  நாள் பூச்சாட்டுத்திருவிழா பூச்சாட்டுடன் தொடங்கின.இதில் பூக்கம்பம் நடுதல்,கம்பம் சுற்றி ஆடுதல், முனியப்பன் பூஜை,கிடாய் வெட்டு,ரத்தசோறு வீசி துஷ்டதேவதைகளை அடக்குதல்,அம்மன் அழைப்பு,நகைகள்,ஜலம் எடுத்துவருதல்,மதுரை வீரன்,வெள்ளையம்மா,பொம்மியம்மா,பட்டாளம்மன் உருவாரங்கள் எடுத்து வருதல்,அம்மன் திருக்கல்யாணம் ஆகிய நடந்தன.முக்கிய நிகழ்ச்சியாகபண்டிகை தினத்தன்று காலை 6 மணியளவில் பெரியநாயக்கன்பாளையம் சந்தைப் பேட்டை மஹா மாரியம்மன் கோவிலிருந்து அலங்கரிக்கப்பட்ட சக்திக் கரகங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து பெண்களுக்கு படையலிட்டனர்,இதனையடுத்து நடந்த அன்னதானத்தை கஸ்துாரிபாளையத்தின் ஊர்பிரமுகர் சாமிநாதன் தொடக்கி வைத்தார்.பின்னர் மாலை 4மணியளவில் லெகுமியம்மன் கோவிலிலிருந்து புறப்பட்ட அக்னிக் கரகங்களுடன் ஏராளமான பெண்கள் தினைமாவிளக்கு மற்றும் முளைப்பாரியுடன் அலங்கரிக்கப்பட்ட தட்டுகளுடன் ஊர்வலமாக பட்டாளம்மன் கோவிலிலுக்கு வந்து அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். மஞ்சள்நீராட்டு நிகழ்ச்சியில் ஶ்ரீ பட்டாளம்மன் திவ்ய அலங்காரத்தில் வெள்ளைக் குதிரையில் மீதமரந்து கிராமத்தின் முக்கியவீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.மறுபூஜையில் அம்மனுக்கு பன்னிருவகை அபிஷேகத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.இறுதியாக கம்பம் கலைத்தலுடன் விழா நிறைவுற்றது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.    













No comments:

Post a Comment