Friday, May 17, 2019

POOCHATTU PANDIGAI 2015 - பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் பண்டிகையில் சக்தி கரகங்கள் ஏந்தி வந்த பக்தர்கள் :பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஶ்ரீ பட்டத்தரசியம்மன் கோவிலில் நடந்த பூச்சாட்டு பணடிகை பெருந்திருவிழா விமரிசையாக நடந்தது. இக்கோவிலின் 15 நாள் திருவிழா நிகழ்ச்சிகள் பூச்சாட்டுடன் தொடங்கின.முக்கிய நிகழ்ச்சிகளான முனிகளை விரட்டும் ரத்தச்சோறு வீசும் நிகழ்ச்சி நடந்தது.பின்னர் அம்மன் அழைப்பு,நகைகள்,ஜலம்,மதுரைவீரன், வெள்ளையம்மா,பொம்மியம்மா,பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் எடுத்துவரும் நிகழ்ச்சிகளும்.சீர்வரிசை ஊர்வலமும் நடந்தன.பண்டிகை தினத்தன்று அதிகாலையில் மணியம்மாள் ரங்கநாதநாயுடு தலைமையில் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தன.தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் சந்தைப் பேட்டை மகாமாரியம்மன் கோவிலிலிருந்து சக்திக் கரகங்கள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.பின்னர் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டனர்.இதனையடுத்து நடந்த அன்னதானத்தை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மன்றத் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடக்கி வைத்தார்.பின்னர் மாலையில் நூற்றுக்கணக்காகன பெண்கள் மாவிளக்கு,முளைப்பாரி ஏந்தி கிராமத்தின் முக்கிய தெருக்களில் ஊர்வலமாக வந்தனர்.பின்னர் நடந்த மஞ்சள்நீராட்டு விழாவில் ஶ்ரீ பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளைக் குதிரையில் நகரின் முக்கியவீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார்.வெள்ளிக்கிழமை மறுபூஜை எனப்படும் வசந்த விழா நடந்தது.இதில் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


































No comments:

Post a Comment