Friday, May 17, 2019
POOSATTU PANDIGAI FEST -2014 - பெரியநாயக்கன்பாளையத்தையடுத்த சாமிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் அம்பேத்கர் நகரில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் பூச்சாட்டுப் பெருந்திருவிழாவையொட்டி புதன்கிழமை சக்திக் கரகங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. இக்கோவில் திருவிழா கடந்த ஜூன் 3ஆம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது.இதனை கோவில் தர்மகர்த்தா பி.ஆர்.ஆர்.ராமு தலைமை வகித்தார்.ஜூன்.10 ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி கோவில் தலைவர் எஸ்.ராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது.தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அபிஷேகமும்,கம்பம் சுற்றி ஆடுதல் நிகழ்ச்சியும் நடந்தன.முக்கிய நிகழ்ச்சிகளாக முனியப்பன் பூஜை திங்கள்கிழமை நள்ளிரவில் நடந்தது.செவ்வாய்கிழமை அம்மன் அழைப்பும்,மதுரைவீரன்,பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் எடுத்துவருதலும் நடந்தன.புதன்கிழமை பண்டிகை நடந்தது.இதில் முதலில் ராஜூ நகரில் உள்ள விநாயகர் கோவிலிருந்து சக்தி கரகங்கள் மங்கள வாத்தியங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.இதனை பெ.நா.பாளையம் பேரூராட்சி 16ஆவது வார்டு கவுன்சிலர் கலாவதி காளியண்ணன் தொடங்கி வைத்தார்.இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் ஏந்தி வந்தனர்.தொடர்ந்து மதியம் பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும்,சிறப்பு அலங்காரப்பூஜைகளும் நடந்தன.மதியம் அன்னதானமும் நடந்தன.இரவு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சி நடந்தது.வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டுவிழா நடந்தது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தி்ருந்தனர்.விழாவில் பெ.நா.பாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித்தலைவர் கே.குருந்தாசலம், கவுன்சிலர்கள் கே.துரை,கே.குணசேகரன்,ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் வரலாறு... பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு ஶ்ரீ பட்டாளம்மன் கோவில் தமிழ்நாடு, கோவை மாவட்டம், வடக்கு...
-
SRI PATTALAMMAN TEMPLE HISTORY Sri Pattalamman Temple is located in Coimbatore, tamilnadu. It is located at a distance of 20km in...
No comments:
Post a Comment