Friday, May 17, 2019

PANDIGAI-POOSATTU VIZHA 2013-PHOTOS - பெரியநாயக்கன்பாளையத்தில் விவேகானந்தபுரத்தில் உள்ள அருள்மிகு ஶ்ரீ பட்டத்தரசியம்மன் கோவில் பூச்சாட்டுப் பண்டிகைப் பெருவிழா புதன்கிழன் விமரிசையாக நடந்தது. பதினைந்து நாள் பண்டிகையாக நடந்த இதின் முக்கிய நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை தொடங்கின.முதலில் பள்ளத்திற்கு சென்று ஜலம் எடுத்து வருதலும்,பின்னர் அம்மன் அழைப்பும் நடந்தன.இதனையடுத்து திருக்கல்யாணத்திற்கான நகைகள் மற்றும் சீர்வரிசைகள் யூனியன் டேங்க் பகுதியிலுள்ள சிறப்புக் கட்டளைதாரர் ரங்கநாதநாயுடு மணியம்மன் வீட்டிலிருந்து மேளதாளங்களுடன் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. பின்னர் பண்டிகையொட்டி செய்யப்பட்டிருந்த வெள்ளைக் குதிரையில் வீற்றிருந்த மதுரை வீரன்,வெள்ளையம்மா,பொம்மியம்மா மற்றும் பட்டத்தரசியம்மன் உருவாரங்கள் மாகாளியம்மன் கோவிலிருந்து சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.புதன்கிழமை அதிகாலை அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது.இதனையடுத்து சந்தைப் பேட்டை மாரியம்மன் கோவிலிருந்து சத்திக் கரங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன.இத்துடன் பெண்கள் பால்குடங்கள் எடுத்து வந்தனர்.பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.பண்டிகையொட்டி கட்டளைதாரர் முருகானந்தம்,அர்ச்சனா குடும்பத்தினர் சார்பில் ஏற்பாடு செய்யப்படிருந்த அன்னதானத்தை கவுன்சிலர்கள் கே.முருகேசன்,குணசேகரன் முன்னிலையில் பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தொடக்கி வைத்தார்.மாலை 3 மணியளவில் ஶ்ரீ லெகுமியம்மன் கோவிலிருந்து மாவிளக்கு ஊர்வலம் தொடங்கியது.திரளான பெண்கள் முளைப்பாரிகளுடன் விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட மாவிளக்குகளை கைகளில் ஏந்தி வந்து அம்மனை வழிபட்டனர்.வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடந்தது.பட்டத்தரசியம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வெள்ளைக் குதிரையில் எழுந்தருளி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார்.பின்னர் கம்பம் கலைத்தலுடன் விழா நிறைவடைந்தது.விழாவில் பேரூராட்சித் துணைத் தலைவர் சந்திரன்,பத்திர எழுத்தர் ஜி.மோகன்,பாஜக ஒன்றிய செயலாளர் ரா.மகேந்திரன்,தேமுதிக பிரமுகர்கள் வக்கீல் பிரபு,ஆரோக்கியசாமி,சிறப்புக் கட்டளைதாரர்கள் கே.ஜனார்த்தனன்,மனோ சுரேஷ்,எம்.ஜெயப்பிரகாஷ்,டாக்டர்கள் சுரேஷ்குமார்,வித்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.




































No comments:

Post a Comment